Popular Posts

Thursday, 25 August 2011

சிரிப்பு.. பயம்... மரியாதை

புறப்படலாம் என..
எழுந்தபோது
உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள்
வீட்டினுல்லே நுழைந்தார்கள்...

சிரிப்புடன்
உன் தாய் தந்தை..
எப்போது வந்தீர்கள் என்ற வினாவோடு..
சிரிப்பு.. பயம்... மரியாதை என அத்தனையும்
என் முகத்தில் சில நொடியில் தோன்றி மறைந்தது

வழக்கமான விசாரிப்புக்கு பின்...
உன் அப்பாவிடமிருந்து விடைபெறும் தறுவாயில்
சாப்பிடு ப்பா என உன் தாய் கூற...
உன் தந்தை அதை வழிமொழிய....
மறுப்பேதும் கூறாமல்
மண்டையை ஆட்டினேன்..
சிரிப்பை அடக்க முடியாமல் நீ சிரித்தாய்...

அரைமணி நேரத்தில் இருமுறை சாப்பிட்டது
இதுதான் முதல்முறை..
உனக்காக ஒரு முறை...
என் வருங்கால மாமனார் மாமிக்காக ஒருமுறை..
ஆம்லேட் வேறு உன் தாய் போட்டுதர..

உன் தந்தை வேகமாக சாப்பிட்டு கொண்டிருக்க...
நான் சாப்பாட்டில் கோலம் போட
( வயிற்றில் இடம் இருந்தாதானே சாப்பிட)
தொண்டைவரை உணவு இருந்ததால்
வாந்தி எடுக்காததுதான் குறை...
டீவியை பார்ப்பது போல்..
என்னை பார்த்து சிரித்துகொண்டிருந்தாய்..
ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தேன்...
உங்களிடமிருந்து விடைபெற்றேன்..

உன் படிப்பை பற்றி..


சிறிது நேரம் தொலைக்காட்சி பாரென..
நீ சமையல் அறைக்கு செல்ல...
நான் ஹாலில் அமர்ந்தபடி இருந்தேன்..
மீண்டும் வந்தாய் என் முன்பு..
ஒரு கையில் தட்டும்..மறுகையில் ஹாட் பாக்ஸ்
சாப்பிட்டு சொல் எப்படி இருக்கென..

உன் பூ விரலால் சுட்ட தோசை..
நானும் பூவைப்போலவே
தோசையைமெதுவாக பீய்த்து சாப்பிட்டேன்..
அமிர்தம் நான் சாப்பிட்டதில்லை..
இப்படிதான் இருக்கும் என உணர்ந்தேன்
உன்னால் படைக்கப்பட்ட உணவு என்பதால்..

எப்படி என் சமையல் என்றாய்..
அமிர்தம் என்றேன்..
யார் அந்த அமிர்தம் என்றாய்..
அடிப்பாவி என நான் சொல்ல ....சிரித்தாய்..!

சில நிமிடங்கள் பேசினோம்..
உன் படிப்பை பற்றி..
ஏதோதோ ஆசைகள் உனக்கு...
மேலும் மேலும் படிக்க வேண்டும்...
வேலைக்கு போகனும் என....
( நீ என் வீட்டிற்க்கு மகாராணியாக வந்தால்
  போதும் என்றது என் மனம்.)
சரிப்பா... நான் புறப்படுகிறேன் என சொல்லியவாறு எழுந்தேன்...

வீட்டிற்கு வந்தவர்களை ..........

வீட்டிற்கு வந்தவர்களை
சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...?
சிரித்தவாரே கேட்டேன்
அடப்பாவி என அழைத்தாய்..
நீ செய்த பாவத்திற்கு
என்னை பாவியாக்கினாய்..
தோசை சுட்டு தரவா என்றாய்..
நீ மாவு குடுத்தா கூட குடிப்பேன்.
நீ முறைத்தபடி சிரித்தாய்..
நான் சிரித்தபடி முறைத்தேன்...
போட  "       " என்று
செல்லமாய் என்னை திட்டினாய்..

நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?

மூன்று மாதத்திற்கு பிறகு..

உங்கள் ஊருக்கு வந்தேன்....
எங்க ஊருக்கு வந்தா..
வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு
உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந்தது

உன் இல்லத்திற்க்கு வந்தேன்-ஆனால்
வரவேற்றது நீ மட்டும்தான்
உன் "ட்ரேட்"மார்க் புன்னகையோடு

அம்மா எங்கே என வினவியதும்..
இப்ப அவங்க டூட்டி முடியற டைம்தான்...வருவாங்க..

நெடுநாட்களுக்கு பிறகு
என்னிடம் பேசினாய்
எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு....

உன் கண்ணைப் பார்க்கும்போதெல்லாம்..
தலைகுனிகிறாய்....
நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?
காதலில்..( மனதிற்குள் நினைத்து கொண்டேன் )

Wednesday, 24 August 2011

வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?

ஒகேனக்கல்லில் மேலும் மேலும்..
சிற்சிறு குறும்புகள் செய்து...
என்னை சிரிக்கவைத்தாய்..
அங்கிருந்து புறப்பட எத்தனித்தோம்..
வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்....

என் தெரு பசங்களெல்லாம்
என்னை விநோதமாக பார்த்தார்கள்
திருவிழாவை விட்டுவிட்டு உன்னோடு சுற்றுகிறனே..
திடிரென என்னை அழைத்தாய்..
பனியாரம் வேனும் வாங்கி வா என்றாய்..

எங்க வீடு பக்கத்திலேயே பனியாரம் விற்பார்கள்
இன்று எங்கள் ஊர் திருவிழா என்பதால் கடையில்லை...
சரி கேட்டுவிட்டாலே என்ன செய்வது என
சைக்கிளை எடுத்து கொண்டு ஊர் முழுவதும் சுற்றினேன்
ஊருக்கே திருவிழா என்று தெரிந்தும்..அவளுக்காக..!
எங்கும் கிடைக்கவில்லை...சொன்னேன் அவளிடம்
சோகமாய் முகம் மாறியது அவளுக்கு..
நான் முதமுறையா ஆசையா கேட்டேன்..
வாங்கிதரல நீ என்றபோது மனது அதிகமாக வலித்தது.
அம்மா சிற்றுண்டி சாப்பிட அழைக்க..
சாப்பிட்டபின் ....ஊருக்கு புறப்பட தயாராகி..புறப்பட்டோம்
பேருந்து நிலையம்வரை உங்களுடன் நானும்..

பஸ் ஏறும் போது கிடைத்த தனிமையில் சொன்னேன்.....
இன்னைக்கு நான் சந்தோசபட்ட மாதிரி எப்போதும் இருந்ததில்லை..
இப்படி நான் வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமென...!
அதுக்கேன்ன சிரிக்க வச்சிட்ட போச்சு...
வாழ்நாள் முழுவதும் உங்கூடவே இருப்பேன் என்றாய்..
கண்ணிர்துளி என் கன்னத்தை தொட்டது...

Saturday, 13 August 2011

காதலுக்கு இதுவா தகுதி ?

எல்லா இடமும் சுற்றிய பிறகு
புறப்பட எத்தனித்தோம்...
ஒரு திருப்பத்தில் தனிமையில் நாமிருவரும்..
என் அருகே வந்தாய்..
மிக அருகே நின்றாய்..
உன் மூச்சு காற்று காற்றில் கலந்து
என்னை அடைந்தது...
சிறிது நேரம் உன் மூச்சில் நான் வாழ்ந்தேன்..!

நம்ம ரெண்டு பேருல
உயரமானவங்க யாருன்னு பார்க்கலாம் என
சொல்லியவாறு..கைகள் இரண்டும் உரசியவாறு நின்றாய்..
( இப்ப நான் மூச்சே விடலப்பா...)
திடிரென்று சிறு குழந்தை போல்...
நான் தான் உயரம் என துள்ளினாய்...
உன் துள்ளலையும்..சந்தோசத்தையும்
அமைதியாய் ரசித்துவிட்டு
சற்று நேர இடைவெளியில் உன்னிடம் பேசினேன்...

உன்னைவிட நான் தான் உயரம் என நான் கூற..
இருவருக்கும் வாக்குவாதம் ..தொடர்ந்தது..
( அவங்களைவிட நான் ரெண்டு  இன்ச் அதிகம் பா உயரத்தில்)
சரி..நீதான் உயரம் அதிகம்.இப்ப அதுகென்ன என்றேன்..
என்னைவிட அதிக உயரமானவங்ககளைதான்
திருமணம் செய்துகொள்வேன் என்றாய்..

நான் உன்னைவிட உயரம்தான் பா..
உன்னைவிட உயரம்தான் பா..என
இப்போது நான் செல்லமாய் சண்டையிட..
சிரித்தவாறே..இப்ப அதுகென்ன..
என்னமோ நான் உன்ன கல்யாணம் பண்னிகிறேன்னு
சொன்ன மாதிரி குதிக்கிற என்றாய்..

( அடிப்பாவி என்னும் சொல் என் அடி வயிற்றிலிருந்து வந்தது..)

எல்லா ஜென்மத்திலையும் ஆசையை காட்டி..
மோசம் செய்வது பெண்ணின் குணம் என புரிந்தது....!

Saturday, 6 August 2011

எதிர்பாராத ஒரு நொடியில்...

படகு சவாரி சென்றோம்....
படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை...
மறுபக்கம் நீயும் நானும்....
(  இரண்டடி இடைவெளியில் )
நடுவில் படகோட்டி....
சிறு அருவி...ஐந்தருவி...என
எல்லா இடமும் சுற்றிகாட்டினான்..படகோட்டி..
அருவியின் அருகே சென்றபோது...
அனைவரும் நனைந்தோம்..
தண்ணீரால் மட்டுமல்ல...
மகிழ்ச்சி வெள்ளத்திலும்தான்..
இடை இடையே...
உன்னையும்....
உன் பெற்றோரையும் நான் போட்டோ எடுக்க...
எதிர்பாராத ஒரு நொடியில்...
ஒரு விநோதமான பாறையை படகோட்டி காட்டினார்..
அதில்  ஒரே நேரத்தில் இருவர் நிற்கும் அளவிற்க்கு இடம் இருக்க..
நீயும் ..நானும் அதற்குள்ளே. செல்ல.
நம் இருவரையும்...சோடியாய்...
உன் தந்தை புகைப்படம் எடுத்தது.....
இன்னும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது...
உன் நினைவை போல........

Tuesday, 26 July 2011

காதலா? கடவுளா..?ஜெயித்தது யார்..?

உன் தந்தை "பாப்கார்ன்" சாப்பிட்டு கொண்டிருக்க.....
நீ அவர் அருகே போனதும் பறித்து சாப்பிட்டாய்...
நான் உன்னை ஓரக்கண்ணால் முறைப்பதை பார்த்ததும்...
இந்தா.சாப்பிடு என்றாய்.....
ஹெ....சிவா வியாளக்கிழமை சாப்பிட மாட்டண்டி....( உன் தாய்)

இல்லமா..அவன் சாப்பிட்டான் முன்ன ...

என்ன சிவா சாப்பிட்டியா என உன் தாய் கேக்க...
அப்போதுதான் உண்மை உரைத்தது......
( சற்றுமுன் சுவிட் கார்ன் சாப்பிட்டது.)
ஒரு கணம் தவித்தேன்..
நீ சிரித்தாய்..
எனக்கு கோபம் வந்தது...
என் மீது..!

2000 நாட்களை கடந்து சென்று கொண்டிருந்த...
என் வியாளக்கிழமையின் விரதத்தை...
என்னுடன் நீ இருந்த
இரண்டாவது நாளிலே முடித்து வைத்தாய்...

சிரிப்பதா..? அழுவதா என தெரியாமலேயே..
சில விநாடிகள் கடந்தது....
இப்போது...ஜெயித்தது

காதலா? கடவுளா..?
தோற்றது நானா? என் விரதமா?...
 

Thursday, 21 July 2011

சுவிட் கார்ன் சுவையானதா..?

எதாவது சாப்பிடலாமா? என நீ கேக்க....
எது வேணும்னாலும் சாப்பிடலாம் என நான் கூற....
சிரித்துகொண்டே... உன் தந்தையோடு சென்றுவிட்டாய்
( இந்த பெண்கள் சிரிச்சே....கவுத்துடுறாங்க பா..)

உன் பெற்றோர் சினி பால்ஸ்- கு
டிக்கெட் வாங்கி கொண்டு முன்னே செல்ல...
நான் உனக்காக காத்திருக்க...
நீ "சுவிட் கார்ன் " வாங்கி வந்தாய்...
ஒரே டப்பா...ஒரே..ஸ்பூன்.......
நீ கொஞ்சம் சாப்பிட்டதும்...
டேஸ்ட் பாருன்னு குடுக்க.
நாசுக்காய் நான் மறுக்க....

நான் குடுத்தா நீ சாப்பிட மாட்டியானு...
அப்பாவியாய் நீ கேக்க...
( எப்படிதான்....முகத்தை அப்பாவியாய் வச்சிகிறாங்களா...)
...சாப்பிட்டேன் உனக்காகவும்....
.( உன் எச்சில் காகவும்..)
நான் கொஞ்சம் சாப்பிடதும் ..
பிடிங்கி கொண்டாய்...நீ சாப்பிட்டாய்..அதே..ஸ்பூனில்

எப்படி இருந்தது சுவிட் கார்ன் என நீ கேக்க..
சுவிட் கார்னே ரொம்ப சுவிட்டா இருக்கும்...
இதை நீ குடுத்து என்றால்.......
நான் சிரித்துகொண்டே சொல்ல...
"போட" என சொல்லிவிட்டு ஓடிப்போனாய்..
இந்த ஒற்றை சொல்லில்தான் வாழ்கிறது என் காதல் 

( காதல் வளர்த்தேன் பாட்டை பாடிக்கொண்டே...
 உங்களை பின்தொடர்ந்தேன் )

தமிழ்நாடு போக்குவரத்து கலகம்.......

தர்மபுரியிலிருந்து பேருந்தில் ...
ஒகேனக்கல்லிற்கு புறப்பட்டோம்....
நீ ..உன் அம்மா.. அப்பா ஒரு சீட்டிலும்
நான் தனி சீட்டிலும்.. அமர்திருந்தோம்...
( உம்ம்ம்ம்ம்....ஒரே..சீட்டில் நாலு பேர்
   உட்காருவது போல் சீட்டு இல்லாததை நினைத்து...
   த.மா.போ.க மேல் கோபமாய் வந்தது..)
ஓரக்கண்ணால்.. உன்னை பார்த்துகொண்டே..வந்ததில்
ஒரு மணி நேரம் முடிந்து ஓகேனக்கல் வந்தது...


என்னென்ன
இடம் இருக்கு ..
இங்கு பார்க்க...என நீ கேக்க
...சினி பால்ஸ்...மெயின் பால்ஸ்..
ஐந்தருவி.....படகு இல்லம் ..என சொல்லிக்கொண்டே போக...

அப்ப ஃபோட்டிங்க் இருக்க என சந்தோசமாய் நீ கேட்டாய்...
....எல்லா இடமும் சுற்றி பார்த்துவிட்டு ..
இறுதியில்..ஃபோட்டிங்க் போலாம் என உன் தந்தை கூற..
உன் முகம் சட்டென வாடியதை நான் கண்டேன்....
உன் தந்தை மீது முதன்முறையாக நான் கோபம் கொண்டேன்

Tuesday, 19 July 2011

முழித்தேன்... சிரித்தேன்...சமாளித்தேன்...

திருவிழாவில் இன்று எருதாட்டம்...
இந்த வீரவிளையாட்டை காண....
வருடம் முழுவதும் காத்திருப்போம்
எங்கள் ஊர் மக்கழும் ...நானும்..!

இன்றைய இரவில்
ஊருக்கு போவதாக நீ சொன்னதால்...
திருவிழா சந்தோசமே தொலைந்து போனது...எனக்கு.!
நாங்கள் "ஒகேனக்கல்" போறோம் வரியா என நீ கேக்க..
சத்தம் இல்லாமல் சந்தோசம் மீண்டும் வந்தது எனக்குள்

அம்மா...நானும் இவர்களுடன் ..
ஒகேனக்கல் போய் வரேன் என கேக்க..
டேய்....
உனக்கு எருதாட்டம் பார்க்க ரொம்ப பிடிக்குமே..என
என் தாய் சொன்னதும்...
நான் முழித்தேன்...பிறகு சிரித்தேன்...சமாளித்தேன்...
ஒரு வழியாக அனுமதி வாங்கி........
உங்களுடன் நானும் வந்தேன்....
எங்கள் ஊர் சுற்றுலாதளத்தை....உங்களுக்கு சுற்றிக்காட்ட..!

Friday, 15 July 2011

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.. இராகவேந்திரர்..

திருவிழாவின் இரண்டாம் நாள்..
இன்று வியாளக்கிழமை.....
என் குருநாதர் ...
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.. இராகவேந்திரர் பிறந்த நாள்...
எல்லா நாட்களும் அசைவம் சாப்பிடுவேன்
வியாளக்கிழமை தவிர.....
இன்று மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் இருப்பேன்..
கடந்த 4 வருடமாக.....
என் குருநாதர் பிறந்தநாள் என்பதால்...!

இரவில் பாட்டுக்கச்சேரி........

திருவிழாவில் ராட்டினம் இல்லமலா..?
ராட்டினத்தில் ஏறி சுத்தினோம்...
....இறங்கியவுடன்.........
தலை சுற்றுகிறது என்றாய்....
என் மனம் உன்னை மட்டும்தான் சுற்றுகிறது என்றென்
( மனசுக்குள் தான் பா..)
மெஜிக் சோ...
சர்க்கஸ்....
......
என அத்தனையும் பார்த்தோம்....
இரவில் பாட்டுக்கச்சேரி இருக்கு என்றென்.
உங்களுக்கு விருப்பமில்லை....ஆதலால்
நானும் செல்லவில்லை..
நண்பர்கள் அழைத்தார்கள்..மறுத்துவிட்டேன்.
ஒரு வழியாக ....
அன்றைய நாள் முடிந்தது....

Tuesday, 12 July 2011

உதடு எப்படி சிவப்பானது ..?

கோவிலை வலம் வந்தோம்....
நான் உன்னையும் சேர்த்து வலம் வந்தேன்...

திடிரென என் நண்பர்கள் என் எதிரே..
என்னை பார்த்து அழைக்க...
தர்மசங்கடமாய் நான் சிரிக்க..
அவர்கள் என்னை முறைக்க...
"அங்கில்" நீங்கள் சுத்தி பாருங்க....
பத்து நிமிடத்தில் வருகிறேன் என விடைபெற்றேன்..
அப்போது நீ சிரித்த சிரிப்பு..
"மாட்டிகிட்டியா" என்பது போல் இருந்தது...

நண்பர்களுடன் சேர்ந்து....
சற்று நேரம் சுற்றிவிட்டு வந்தேன்...
என்னை பார்த்ததும் அதிர்ந்தாய்...
என்ன என்றேன் கண்களால்...
உதட்டின் மீது கை வைத்தாய்(அவங்க உதடு தான் பா)..

"குச்சிமிட்டாய்" சாப்பிட்டேன் என்று சொன்னதற்கு...
உதடு எப்படி சிவப்பானது என்றாய்...
வருடத்திற்கு ஒருமுறை.......அதுதான்
எங்களுக்கு லிப்ஸ்டிக் என சிரித்தவாறே சொல்ல...
நீ முறைத்தவாறே உன் அப்பாவை பின் தொடர்ந்தாய்..!

Sunday, 10 July 2011

அதிர்ச்சிக்குள்ளான காதலி...

என்னப்பா இவ்வளவு நெரிசல் என உன் அப்பா வினவ..
நீங்கள் வேண்டியது நடக்கும் "அங்கில்" என்றேன்.....

கூட்டத்தின் நெரிசலில்...
சரியாக சினிமாவில் வருவது போல்
நாம் ஒரு பக்கமும் ..உன் பெற்றோர் ஒரு பக்கமாய் பிரிந்தோம்..

உன் கரம் பற்றிக்கொண்டு...கருவரைக்குள் சென்றேன்..
இறைவனை வழிப்பட்டோம்....
உன் தாய் தந்தையரை
உன் கண்கள் தேடியது.....
கோவிலுக்கு வெளீயே காத்திருப்போம் வா என்றவாறு..
உன்னை அழைத்துகொண்டு வெளியே வந்தேன்....

உன் நெற்றியில் திருநீரு இல்லை.....
ஏன் திருநீரு வைக்கவில்லை என்றேன்...
கூட்டத்தில் எடுக்க முடியவைல்லை என்றாய்..
நீ எதிர்பார்க்காத ஒரு விநாடியில்.....
உன் நெற்றியில் திருநீரு-உபயம் என் கை விரல்கள்.
அதிர்ச்சிக்குள்ளாகி என்னை பார்த்தாய்...-அன்று
நீ பார்த்த பார்வையின் அர்த்தம் இன்று வரை எனக்கு புரியவில்லை. !

Saturday, 9 July 2011

எந்த ஆண்களின் ஸ்பரிசமும்......

ஒரு வழியாக புறப்பட்டோம் கோவிலுக்கு......
வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்ல
முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகும்..
நினைக்கும் போதே சந்தோசம் தலைக்கேரியது..
எல்லோரும் நடந்தே சென்றோம்...
வருடத்திற்க்கு ஒரு முறைதான் நடக்கும்
திருவிழா என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம்....
ஆண்களும் பெண்களும்
ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு
கோவிலுக்கு செல்ல முற்பட.......
உன் மேல் எந்த ஆண்களின் "ஸ்பரிசமும்" படாமல் இருக்க
நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா....
அத்தனையும் பார்த்தபடி.....ரசித்தபடி நீ..!

Friday, 8 July 2011

எந்தன் கடவுளே ...நீ தானா..?

நீண்ட நேர பயணகளைப்பில்

நீ மட்டும் உறங்க சென்றாய்....

உறங்குதல் கூட அழகான விசயம் தான் என..

நீ உறங்கும் ஸ்டைல் எனக்கு உணர்த்தியது...

கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் உன்னை..

மற்றவர்கள் என்னை பார்க்காத வரை......!



எல்லோரும் கோவிலுக்கு செல்ல தயார் ஆனபோது..

நித்திரைக்கு விடை கொடுத்தாய் ....நீ.

சத்தம் இல்லாமல் புன்னகைத்தாய்......

கோவிலுக்கு செல்லும் எண்ணமே ..

என்னை விட்டு நீங்கியது......!

எந்தன் கடவுளே ...நீ தானா..?

Thursday, 7 July 2011

உன்னிடம் மட்டும் நான் பேசாமல்..!

ஒரு வழியாக ..
நான் எதிர்பார்த்த நாளும் வந்தது...
காலை 4 மணிக்கே தூக்கம் கலைந்தது..
( எப்பவூம் 7.30 தான் பா )
நினைவெல்லாம் நீ மட்டும்தான் என
சொல்லதான் வேண்டுமா...?

எங்கள் ஊருக்கு வந்ததும்
தொலைபேயில் உன் அன்னை..என் அன்னையிடம்.....
நான் தான் வந்தேன் ..உங்களிடம்...
எங்கள் வீட்டிற்க்கு அழைத்து வர......
வந்து சேர்ந்தேன் உங்களிடம்.....

புன்னகையாய் நீங்கள் மூவரும்....!
சந்தோசமாய் இருந்தது...
சிறிது வழக்கமான விசாரிப்புக்கு பின்..
எங்கள் வீட்டிற்கு போகும் வழியில்
பேசியபடி நடந்தோம்...
உன்னிடம் மட்டும் நான் பேசாமல்..!

Wednesday, 6 July 2011

காதல் பெருவிழா..

எங்கள் ஊரில் திருவிழா....
மிக சிறப்பாக நடக்கும்
வருடத்திற்க்கு ஒரு முறை...
இந்த முறை உங்கள் குடும்பத்தை அழைத்திருந்தோம்....
கண்டிப்பாக வருவதாக உன் அம்மா சொன்னார்கள்..

அன்றே. தொடங்கியது ...எனக்கு திருவிழா
நீயும் வருவாய் அல்லவா?..


.......இதோ இன்னும்

பதிமூன்று நாட்களில் தொடங்கும் திருவிழா..
எனக்கான காதல் பெருவிழா..

Sunday, 3 July 2011

நான் எங்கு செல்ல.

எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்...
உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்....
எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்..
நான் எங்கு செல்ல...

Friday, 1 July 2011

நண்பர்களாய் மாறியதால்....

கொஞ்சம் கொஞ்சமாய்......
உன் வீட்டு நபர்களும்..
என் வீட்டு நபர்களும்....
நண்பர்களாய் மாறியதால்....
எனக்கு வசதியாய் போயிற்று
உன்னை அடிக்கடி காண்பதற்கு..!

Wednesday, 29 June 2011

காதலிக்கு ஒரு வேண்டுகோள்..

நீ என்னுடன் பேசிய நாட்களைவிட...
என் கனவில் வந்த நாட்கள்தான் அதிகம் ..
என் காதலியே....

....காத்திருக்கிறேன் மருபடியும்
எப்போது பேசுவாய் என...!

Monday, 27 June 2011

மாயமோ.. மந்திரமோ..

அதென்ன...
மாயமோ.. மந்திரமோ..தெரியவில்லை.
ஆண்களும் பெண்களிடம் பேசுகிறார்கள்...
பெண்களும் ஆண்களிடம் பேசுகிறார்கள்.. ஆனால்
காதல் என்னும் நோய் ...
ஆண்களை மட்டும் அதிகம் தாக்குகிறதே...

மருத்துவ பரிசோதனை...

நானும்...
உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்று
உன்னால்தான் இந்த உலகத்திற்கு தெரிந்தது..
உன்னைப் பார்த்த நொடி முதல்
உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்..
என் அத்தனை..
ஹார்மோன்களும் வேலை செய்தது..
என் அத்தனை...
ஹார்மோன்களும் வேலை செய்கிறது என..
மருத்துவ பரிசோதனையின்றி நிருபிக்கப்பட்டது...!

...................
நன்றி...
காதல் என்னும் நோயை
எனக்கு குடுத்ததற்கு !

Saturday, 25 June 2011

சிரிப்பும் அழுகையும் ...

சிரிப்பும் அழுகையும்
என் இரு கண்கள்
இதை என்னிடமிருந்து
பிரிக்க முடியாது......
உன்னை போலவே....!

Friday, 24 June 2011

காதலிப்பதற்கான தகுதி....

நீ
அழுவதற்கு
ஆசைப்படுகிறாய் என்றால்....
நீ
காதலிக்க ஆரம்பித்துவிட்டாய்
என்று பொருள்.

Thursday, 23 June 2011

ஒரு சந்தர்ப்பம்....

நேற்று கூட...
ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது
என் காதலை....
உன்னிடம் சொல்ல ..!ஆனால்
தயக்கம்...
உன்னிடம் என் காதலை
எப்படி சொல்வதென்று....
....................................
உன்னை விரும்புகிறேன் என்பதா?
உன்னை காதலிக்கிறேன் என சொல்வதா?
உன்னோடு சேர்ந்து
வாழ ஆசைபடுகிறேன் என்பதா?

Wednesday, 22 June 2011

அழவைப்பது ......

அழவைப்பது ......
அவள்தான் என தெரிந்தும்
அடம் பிடிக்கிறது மனது...
அவளைத்தான் காண்பேன் என.....!

இரண்டாவது நாளிலே....

பழக ஆரம்பித்த
இரண்டாவது நாளிலே 144 போட்டாய்...
உன்னை வாங்க போங்க...
என்று நான் அழைத்ததற்கு...
இவ்வளவு விரைவில்
என் நேசத்தை
புரிந்துக்கொண்ட உனக்கு....
என் காதலை
புரிந்துக்கொள்ள
இவ்வளவு தாமதம் ஏன்?

Monday, 20 June 2011

உன் குல தொழிலா..

மௌனம் என்ன
உன் குல தொழிலா..
-அதை
விட்டுவிடு பெண்ணே...
பிழைத்துப்போகிறென் நான்
இந்த காதல் நோயிலிருந்து...

அழகல்ல.....திமிர்..

அழகான
பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்குமென தெரியும்.....
- ஆனால்

உனக்கு கொஞ்சம்
அதிகமாகவே இருக்குதடி....
அழகல்ல.....திமிர்..

Sunday, 19 June 2011

எல்லா நோய்க்கும் மருந்து...........

எல்லா நோய்க்கும்
மருந்துண்டாமே.....
சில நோயை தவிர....
எனக்கு ஏற்பட்டிருக்கும்
நோயை விரைவில்
குணப்படுத்திவிடலாமாம் என
உளவியல் நிபுணர்கள்
கூறினார்கள்.....




எந்த மருந்தும் தேவையில்லை...
நீ மட்டும்
எனக்கு சொந்தமானால் போதும் !

Saturday, 18 June 2011

இடி...

என் வாழ்வில்
பல பெண்கள்
மின்னலாய் வந்தார்கள்...
மின்னலாய் போனார்கள்-ஆனால்
காதல் என்னும்
"இடி"யை என்னுள்
இறக்கியது நீதான்

Friday, 17 June 2011

உன் கண்ணைப்பார்த்தவன் ....

மின்னல் தாக்கி
இறந்தவனும் உண்டு
பிழைத்தவனும் உண்டு- ஆனால்
உன் கண்ணைப்பார்த்தவன்
பிழைத்திருக்க வாய்ப்பில்லை
லேசர் போன்ற கண்கள்
அவனை காயப்படுத்திருக்கும்(மனக்காயம்)

Thursday, 16 June 2011

காதல் என்னும் நோய்..

வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகுமாம்
யார் சொன்னது...
உன் பளிச்சிடும்
மின்னல் சிரிப்பினால்தானே
காதல் என்னும் நோய்
என்னை தொற்றிக்கொண்டது ....
பெண்ணே......

Wednesday, 15 June 2011

தடுமாற்றம் ...

நேற்றுவரை நினைத்ததில்லை...
காரணம் புரியவில்லை
ஏனோ தெரியவில்லை
திடிரென எனக்குள்
ஒரு (தடு)மாற்றம் !

நான் நானாக
இருந்தவரை
இருந்ததில்லை
இந்த தடுமாற்றம் !

நின்னை நினைக்கும்போது
என்னையே மறப்பதாலோ..
என்னவோ..?

முதல் காதல் ..?

முதல் காதல்
எப்போது வருமென யாருக்கும் தெரியாது...
ஆண்களுக்கு ......
வயதுக்கு வந்த பின்பு வரலாம்...
பெண்களுக்கு........
வயதுக்கு வருவதற்கு முன்பே வரலாம்..!

"ஆட்டோகிராப்"

பள்ளியில் ஒரு காதல்...
கல்லுரியில் ஒரு காதல்.
கல்லுரி முடிந்தபின் ஒரு காதல்
கல்யானத்திற்கு பின்
மனைவி/கணவனுடன் ஒரு காதல் என
காதல் எப்போதும் ஒரு "ஆட்டோகிராப்" தான்

அதிர்ஸ்ட்டசாலி..நீ தான்

உலகத்திலேயே...
அதிர்ஸ்ட்டசாலி  நீ தான்..
நான் உன்னை காத்லிப்பதால்....

அதிர்ஸ்ட்டம் இல்லாதவனும் நானே..
நீ  இன்னும் ....
என்னை ஏற்றுக்கொள்ளாததால்....!

Tuesday, 14 June 2011

"வெட்கத்தில்"

உன்னை பார்க்கனும் போல இருக்கு
வா டா என்றாய்...
எனக்கிருக்கும்
வேலைப்பளுவிற்க்கு இடையிலும்
உன்னை சந்திக்க வந்தேன்
உன் வீட்டிற்க்கு நான் வந்த சிறிது நேரத்தில்
உன் அன்னை என்னை அழைத்தாள் சாப்பிட....
என் கண்கள் உன்னை நோக்கியது
போய் சாப்பிடு என்றாய்
வந்து பரிமாறு என்றேன் கண்களால்..
"வெட்கத்தில்" உன் தனி அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய்
உன்னை "வெட்கபட" வைத்ததில்
பெருமிதம் கொண்டு
சந்தோசமாய் சாப்பிட சென்றேன் !

மார்ச்-2009

இன்று......
ஒரு மகத்தான நாள்
என் அம்மாவை ..
உன் வீட்டிற்கு அழைத்து வந்தேன்!
உன் அம்மாவிற்கு என் அம்மாவை
அறிமுகபடுத்தி வைத்தாய்.
இன்று தொடங்கியது
ஒரு புது உறவு..

Monday, 13 June 2011

காபி சாப்புக்கு

சாலையில் நடக்கும் போது....
கண்ணில்..டீ கடை படும்போதெல்லாம்..
நினைவிற்கு வருகிறது..
நாம் "காபி சாப்புக்கு' போனது...அப்படியே...
காப்பி சாப்பிடாமல் வெளியே வந்ததும் !

Friday, 10 June 2011

பேருந்து பயனம்...3/3

உன் கண்களில்...
தாரை தாரையாக கண்ணிர்..
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ..
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில்
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்...
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன் !

உன் கண்ணிரைக் கண்டதுமே...
என் கண் கலங்க....
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்....
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை !
அத்தனையும் பார்த்தபடி
உன் அன்னை..!

பேருந்து பயனம்...2/3

காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு !
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்...
வரவேற்றாய்...

பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ..
எந்த விரல்கள் வீங்கியது..காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய ....
உன் பாதங்களை காட்டினாய் !

வீக்கம் அதிகமாகதான் இருந்தது...
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு....உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....

சொடுக்கு சத்தத்திற்கு பதில்....
உன் அழுகுரல் சத்தம்தான்  கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....
என் கண்களும் கலங்க தொடங்கியது..........

பேருந்து பயனம்... 1/3

நீ
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது
வழுக்கிவிழுந்து.....
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்.....
..........துடித்தேன்.......
புறப்பட்டேன் உன்னை காண.......!

வழக்கமாக என் பேருந்து பயணத்தில்..
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே......
கண்களின் ஓரம் கண்ணிர்துளி..
....அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று !

நாம் நல்ல நண்பர்கள்...

நாம் நல்ல நண்பர்கள்...
எனக்கு பிடித்த நண்பன்
நீ தான் ..நீ தான் என்று
நாம் பேசும் போதெல்லாம்
சொல்கிறாயே......
எங்கே காதலித்து விடுவோம் என்ற பயத்தில்
ஒவ்வொரு முறையும்
நண்பன் என்கிறாயோ.. !

Thursday, 9 June 2011

நீ என்னுடன் பேசாததால்..

எனக்கு கவிதை எழுத
கற்றுக்கொடுத்தவள் நீ....
உறங்கி கொண்டிருந்த
என் கற்பனையை
மீண்டும் ஊற்றெடுக்க காரணம் நீ...
இப்போது
என் கற்பனைதிறன் மங்குகிறது...
நீ என்னுடன் பேசாததால்..

Tuesday, 7 June 2011

"கோமாளி" வேசம்...

நான் எதிர்பார்க்காத ஒரு நாள்...
அலைப்பேசி அழைத்தது.....
அழைத்தது நீ என்பதால்....
ஆர்வமாய் எடுத்தேன்.

எப்படி "டா" இருக்க? என்றாய்...
வானில் பறப்பது போல் இருந்தது..!
நீ எப்படி இருகிறாய்..என்றேன்..
முகமெல்லாம் "பரு" இருக்கு டா என..
"சினுங்கினாய்"..

அந்த சினுங்களுக்காகவே...
இன்னொரு முறை எப்படி இருக்கிறாய் என்றேன்..
"டாய்" ய் ய ய் ய்ய் ய்..என இழுத்தாய்..
(இன்பமே..உந்தன் பேர் பெண்மை யோ..)

என் "பரு" போவதற்க்கு ஒரு வழி சொல்லுடா..என்றாய்.
லுஸூ அது "ஆர்மோன்" பிரச்சனை தான் ..
விரைவில் பரு போய் விடும் வருத்தபடாதே....என்றேன்..
ஹ ஹ ஹா ஹா..என விலா எழும்பு நோகும்வரை சிரித்தாய்..
ஏன் பா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு...

அது ஆர்மோன் இல்ல."ஹார்மோன்"  என்றாய்...
நீ எல்லாம் எப்படி....
உண்மையைய் சொல் ....
நீ பிட் அடிச்சு தானே..கல்லூரியில் பாஸ் பண்ண என்று...
சொல்லியவறே..சிரித்துக்கொண்டே இருந்தாய்..

இந்த சிரிப்புக்காகவே..
ஒவ்வொரு முறையும்
உன்னிடம்  "கோமாளி" ஆகலாம் என தோன்றுகிறது..!

Sunday, 5 June 2011

என்னையும் சிரிக்க வைத்தாய்

நான் போன் செய்தும்...
நெடுநேரம் நீ எடுக்கவில்லை
நான் பயந்து போனென்..
அறிமுகமான இரண்டாவது வாரத்திலெயே
போன் செய்தது சரியா? தவறா?
என மனம் குழம்பியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீயே வந்தாய்
சாப்பிட்டு கொண்டிருந்தேன் என்றாய்
அதனால் என்ன
தாரளமாக பேசிக்கொண்டே
சாப்பிடலாமே என்றேன் .... இல்ல
எப்பவுமே.. எனக்கு எங்க அம்மாதான்
ஊட்டி விடுவங்க என்றாய்..நீ கொடுத்துவைத்தவள் என்றேன் ....
உன் அம்மா நம்பர் குடு
உனக்கும் ஊட்டிவிட சொல்லுகிறேன் என்றாய்....
அதிர்ச்சியில் ஆடித்தான் போனேன்..

வேண்டாம் தாயே..

நீ சொன்னதே..

வயிறு நிரம்பியது என்றேன்..
சிரித்துவிட்டாய்...
என்னையும் சிரிக்க வைத்தாய்..!

Saturday, 4 June 2011

அத்தனையும் நடிப்பா?..

நண்பர்களாக
சென்று கொண்டிருந்த
நம் பயனத்தில்....
காதல் என்னும் கல் தடுக்கி விழுந்தேன்
தூக்கிவிடாமலே.. சென்று கொண்டிருக்கிறாய்
நான் காதலில் விழுந்தது தெரியாதா ?
...   -இல்லை
தெரியாதது போல் நடித்துக்கொண்டிருக்கிறாயா....பெண்ணே!

என்னை மட்டும்..

என்னை பிடிக்கும் என்று
சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான்
பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் !