Popular Posts

Tuesday 26 July 2011

காதலா? கடவுளா..?ஜெயித்தது யார்..?

உன் தந்தை "பாப்கார்ன்" சாப்பிட்டு கொண்டிருக்க.....
நீ அவர் அருகே போனதும் பறித்து சாப்பிட்டாய்...
நான் உன்னை ஓரக்கண்ணால் முறைப்பதை பார்த்ததும்...
இந்தா.சாப்பிடு என்றாய்.....
ஹெ....சிவா வியாளக்கிழமை சாப்பிட மாட்டண்டி....( உன் தாய்)

இல்லமா..அவன் சாப்பிட்டான் முன்ன ...

என்ன சிவா சாப்பிட்டியா என உன் தாய் கேக்க...
அப்போதுதான் உண்மை உரைத்தது......
( சற்றுமுன் சுவிட் கார்ன் சாப்பிட்டது.)
ஒரு கணம் தவித்தேன்..
நீ சிரித்தாய்..
எனக்கு கோபம் வந்தது...
என் மீது..!

2000 நாட்களை கடந்து சென்று கொண்டிருந்த...
என் வியாளக்கிழமையின் விரதத்தை...
என்னுடன் நீ இருந்த
இரண்டாவது நாளிலே முடித்து வைத்தாய்...

சிரிப்பதா..? அழுவதா என தெரியாமலேயே..
சில விநாடிகள் கடந்தது....
இப்போது...ஜெயித்தது

காதலா? கடவுளா..?
தோற்றது நானா? என் விரதமா?...
 

Thursday 21 July 2011

சுவிட் கார்ன் சுவையானதா..?

எதாவது சாப்பிடலாமா? என நீ கேக்க....
எது வேணும்னாலும் சாப்பிடலாம் என நான் கூற....
சிரித்துகொண்டே... உன் தந்தையோடு சென்றுவிட்டாய்
( இந்த பெண்கள் சிரிச்சே....கவுத்துடுறாங்க பா..)

உன் பெற்றோர் சினி பால்ஸ்- கு
டிக்கெட் வாங்கி கொண்டு முன்னே செல்ல...
நான் உனக்காக காத்திருக்க...
நீ "சுவிட் கார்ன் " வாங்கி வந்தாய்...
ஒரே டப்பா...ஒரே..ஸ்பூன்.......
நீ கொஞ்சம் சாப்பிட்டதும்...
டேஸ்ட் பாருன்னு குடுக்க.
நாசுக்காய் நான் மறுக்க....

நான் குடுத்தா நீ சாப்பிட மாட்டியானு...
அப்பாவியாய் நீ கேக்க...
( எப்படிதான்....முகத்தை அப்பாவியாய் வச்சிகிறாங்களா...)
...சாப்பிட்டேன் உனக்காகவும்....
.( உன் எச்சில் காகவும்..)
நான் கொஞ்சம் சாப்பிடதும் ..
பிடிங்கி கொண்டாய்...நீ சாப்பிட்டாய்..அதே..ஸ்பூனில்

எப்படி இருந்தது சுவிட் கார்ன் என நீ கேக்க..
சுவிட் கார்னே ரொம்ப சுவிட்டா இருக்கும்...
இதை நீ குடுத்து என்றால்.......
நான் சிரித்துகொண்டே சொல்ல...
"போட" என சொல்லிவிட்டு ஓடிப்போனாய்..
இந்த ஒற்றை சொல்லில்தான் வாழ்கிறது என் காதல் 

( காதல் வளர்த்தேன் பாட்டை பாடிக்கொண்டே...
 உங்களை பின்தொடர்ந்தேன் )

தமிழ்நாடு போக்குவரத்து கலகம்.......

தர்மபுரியிலிருந்து பேருந்தில் ...
ஒகேனக்கல்லிற்கு புறப்பட்டோம்....
நீ ..உன் அம்மா.. அப்பா ஒரு சீட்டிலும்
நான் தனி சீட்டிலும்.. அமர்திருந்தோம்...
( உம்ம்ம்ம்ம்....ஒரே..சீட்டில் நாலு பேர்
   உட்காருவது போல் சீட்டு இல்லாததை நினைத்து...
   த.மா.போ.க மேல் கோபமாய் வந்தது..)
ஓரக்கண்ணால்.. உன்னை பார்த்துகொண்டே..வந்ததில்
ஒரு மணி நேரம் முடிந்து ஓகேனக்கல் வந்தது...


என்னென்ன
இடம் இருக்கு ..
இங்கு பார்க்க...என நீ கேக்க
...சினி பால்ஸ்...மெயின் பால்ஸ்..
ஐந்தருவி.....படகு இல்லம் ..என சொல்லிக்கொண்டே போக...

அப்ப ஃபோட்டிங்க் இருக்க என சந்தோசமாய் நீ கேட்டாய்...
....எல்லா இடமும் சுற்றி பார்த்துவிட்டு ..
இறுதியில்..ஃபோட்டிங்க் போலாம் என உன் தந்தை கூற..
உன் முகம் சட்டென வாடியதை நான் கண்டேன்....
உன் தந்தை மீது முதன்முறையாக நான் கோபம் கொண்டேன்

Tuesday 19 July 2011

முழித்தேன்... சிரித்தேன்...சமாளித்தேன்...

திருவிழாவில் இன்று எருதாட்டம்...
இந்த வீரவிளையாட்டை காண....
வருடம் முழுவதும் காத்திருப்போம்
எங்கள் ஊர் மக்கழும் ...நானும்..!

இன்றைய இரவில்
ஊருக்கு போவதாக நீ சொன்னதால்...
திருவிழா சந்தோசமே தொலைந்து போனது...எனக்கு.!
நாங்கள் "ஒகேனக்கல்" போறோம் வரியா என நீ கேக்க..
சத்தம் இல்லாமல் சந்தோசம் மீண்டும் வந்தது எனக்குள்

அம்மா...நானும் இவர்களுடன் ..
ஒகேனக்கல் போய் வரேன் என கேக்க..
டேய்....
உனக்கு எருதாட்டம் பார்க்க ரொம்ப பிடிக்குமே..என
என் தாய் சொன்னதும்...
நான் முழித்தேன்...பிறகு சிரித்தேன்...சமாளித்தேன்...
ஒரு வழியாக அனுமதி வாங்கி........
உங்களுடன் நானும் வந்தேன்....
எங்கள் ஊர் சுற்றுலாதளத்தை....உங்களுக்கு சுற்றிக்காட்ட..!

Friday 15 July 2011

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.. இராகவேந்திரர்..

திருவிழாவின் இரண்டாம் நாள்..
இன்று வியாளக்கிழமை.....
என் குருநாதர் ...
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ.. இராகவேந்திரர் பிறந்த நாள்...
எல்லா நாட்களும் அசைவம் சாப்பிடுவேன்
வியாளக்கிழமை தவிர.....
இன்று மாலை 4 மணி வரை உண்ணாவிரதம் இருப்பேன்..
கடந்த 4 வருடமாக.....
என் குருநாதர் பிறந்தநாள் என்பதால்...!

இரவில் பாட்டுக்கச்சேரி........

திருவிழாவில் ராட்டினம் இல்லமலா..?
ராட்டினத்தில் ஏறி சுத்தினோம்...
....இறங்கியவுடன்.........
தலை சுற்றுகிறது என்றாய்....
என் மனம் உன்னை மட்டும்தான் சுற்றுகிறது என்றென்
( மனசுக்குள் தான் பா..)
மெஜிக் சோ...
சர்க்கஸ்....
......
என அத்தனையும் பார்த்தோம்....
இரவில் பாட்டுக்கச்சேரி இருக்கு என்றென்.
உங்களுக்கு விருப்பமில்லை....ஆதலால்
நானும் செல்லவில்லை..
நண்பர்கள் அழைத்தார்கள்..மறுத்துவிட்டேன்.
ஒரு வழியாக ....
அன்றைய நாள் முடிந்தது....

Tuesday 12 July 2011

உதடு எப்படி சிவப்பானது ..?

கோவிலை வலம் வந்தோம்....
நான் உன்னையும் சேர்த்து வலம் வந்தேன்...

திடிரென என் நண்பர்கள் என் எதிரே..
என்னை பார்த்து அழைக்க...
தர்மசங்கடமாய் நான் சிரிக்க..
அவர்கள் என்னை முறைக்க...
"அங்கில்" நீங்கள் சுத்தி பாருங்க....
பத்து நிமிடத்தில் வருகிறேன் என விடைபெற்றேன்..
அப்போது நீ சிரித்த சிரிப்பு..
"மாட்டிகிட்டியா" என்பது போல் இருந்தது...

நண்பர்களுடன் சேர்ந்து....
சற்று நேரம் சுற்றிவிட்டு வந்தேன்...
என்னை பார்த்ததும் அதிர்ந்தாய்...
என்ன என்றேன் கண்களால்...
உதட்டின் மீது கை வைத்தாய்(அவங்க உதடு தான் பா)..

"குச்சிமிட்டாய்" சாப்பிட்டேன் என்று சொன்னதற்கு...
உதடு எப்படி சிவப்பானது என்றாய்...
வருடத்திற்கு ஒருமுறை.......அதுதான்
எங்களுக்கு லிப்ஸ்டிக் என சிரித்தவாறே சொல்ல...
நீ முறைத்தவாறே உன் அப்பாவை பின் தொடர்ந்தாய்..!

Sunday 10 July 2011

அதிர்ச்சிக்குள்ளான காதலி...

என்னப்பா இவ்வளவு நெரிசல் என உன் அப்பா வினவ..
நீங்கள் வேண்டியது நடக்கும் "அங்கில்" என்றேன்.....

கூட்டத்தின் நெரிசலில்...
சரியாக சினிமாவில் வருவது போல்
நாம் ஒரு பக்கமும் ..உன் பெற்றோர் ஒரு பக்கமாய் பிரிந்தோம்..

உன் கரம் பற்றிக்கொண்டு...கருவரைக்குள் சென்றேன்..
இறைவனை வழிப்பட்டோம்....
உன் தாய் தந்தையரை
உன் கண்கள் தேடியது.....
கோவிலுக்கு வெளீயே காத்திருப்போம் வா என்றவாறு..
உன்னை அழைத்துகொண்டு வெளியே வந்தேன்....

உன் நெற்றியில் திருநீரு இல்லை.....
ஏன் திருநீரு வைக்கவில்லை என்றேன்...
கூட்டத்தில் எடுக்க முடியவைல்லை என்றாய்..
நீ எதிர்பார்க்காத ஒரு விநாடியில்.....
உன் நெற்றியில் திருநீரு-உபயம் என் கை விரல்கள்.
அதிர்ச்சிக்குள்ளாகி என்னை பார்த்தாய்...-அன்று
நீ பார்த்த பார்வையின் அர்த்தம் இன்று வரை எனக்கு புரியவில்லை. !

Saturday 9 July 2011

எந்த ஆண்களின் ஸ்பரிசமும்......

ஒரு வழியாக புறப்பட்டோம் கோவிலுக்கு......
வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்ல
முப்பது நிமிடங்களுக்கு மேல் ஆகும்..
நினைக்கும் போதே சந்தோசம் தலைக்கேரியது..
எல்லோரும் நடந்தே சென்றோம்...
வருடத்திற்க்கு ஒரு முறைதான் நடக்கும்
திருவிழா என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம்....
ஆண்களும் பெண்களும்
ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு
கோவிலுக்கு செல்ல முற்பட.......
உன் மேல் எந்த ஆண்களின் "ஸ்பரிசமும்" படாமல் இருக்க
நான் பட்ட பாடு இருக்கே..அப்பப்பா....
அத்தனையும் பார்த்தபடி.....ரசித்தபடி நீ..!

Friday 8 July 2011

எந்தன் கடவுளே ...நீ தானா..?

நீண்ட நேர பயணகளைப்பில்

நீ மட்டும் உறங்க சென்றாய்....

உறங்குதல் கூட அழகான விசயம் தான் என..

நீ உறங்கும் ஸ்டைல் எனக்கு உணர்த்தியது...

கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் உன்னை..

மற்றவர்கள் என்னை பார்க்காத வரை......!



எல்லோரும் கோவிலுக்கு செல்ல தயார் ஆனபோது..

நித்திரைக்கு விடை கொடுத்தாய் ....நீ.

சத்தம் இல்லாமல் புன்னகைத்தாய்......

கோவிலுக்கு செல்லும் எண்ணமே ..

என்னை விட்டு நீங்கியது......!

எந்தன் கடவுளே ...நீ தானா..?

Thursday 7 July 2011

உன்னிடம் மட்டும் நான் பேசாமல்..!

ஒரு வழியாக ..
நான் எதிர்பார்த்த நாளும் வந்தது...
காலை 4 மணிக்கே தூக்கம் கலைந்தது..
( எப்பவூம் 7.30 தான் பா )
நினைவெல்லாம் நீ மட்டும்தான் என
சொல்லதான் வேண்டுமா...?

எங்கள் ஊருக்கு வந்ததும்
தொலைபேயில் உன் அன்னை..என் அன்னையிடம்.....
நான் தான் வந்தேன் ..உங்களிடம்...
எங்கள் வீட்டிற்க்கு அழைத்து வர......
வந்து சேர்ந்தேன் உங்களிடம்.....

புன்னகையாய் நீங்கள் மூவரும்....!
சந்தோசமாய் இருந்தது...
சிறிது வழக்கமான விசாரிப்புக்கு பின்..
எங்கள் வீட்டிற்கு போகும் வழியில்
பேசியபடி நடந்தோம்...
உன்னிடம் மட்டும் நான் பேசாமல்..!

Wednesday 6 July 2011

காதல் பெருவிழா..

எங்கள் ஊரில் திருவிழா....
மிக சிறப்பாக நடக்கும்
வருடத்திற்க்கு ஒரு முறை...
இந்த முறை உங்கள் குடும்பத்தை அழைத்திருந்தோம்....
கண்டிப்பாக வருவதாக உன் அம்மா சொன்னார்கள்..

அன்றே. தொடங்கியது ...எனக்கு திருவிழா
நீயும் வருவாய் அல்லவா?..


.......இதோ இன்னும்

பதிமூன்று நாட்களில் தொடங்கும் திருவிழா..
எனக்கான காதல் பெருவிழா..

Sunday 3 July 2011

நான் எங்கு செல்ல.

எனக்கு கஷ்டம் வரும் போதெல்லாம்...
உன் மடியில் படுத்துறங்க ஆசைப்படுவேன்....
எனக்கு கஷ்டத்தை குடுப்பதே நீ என்றால்..
நான் எங்கு செல்ல...

Friday 1 July 2011

நண்பர்களாய் மாறியதால்....

கொஞ்சம் கொஞ்சமாய்......
உன் வீட்டு நபர்களும்..
என் வீட்டு நபர்களும்....
நண்பர்களாய் மாறியதால்....
எனக்கு வசதியாய் போயிற்று
உன்னை அடிக்கடி காண்பதற்கு..!