Popular Posts

Thursday 25 August 2011

சிரிப்பு.. பயம்... மரியாதை

புறப்படலாம் என..
எழுந்தபோது
உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள்
வீட்டினுல்லே நுழைந்தார்கள்...

சிரிப்புடன்
உன் தாய் தந்தை..
எப்போது வந்தீர்கள் என்ற வினாவோடு..
சிரிப்பு.. பயம்... மரியாதை என அத்தனையும்
என் முகத்தில் சில நொடியில் தோன்றி மறைந்தது

வழக்கமான விசாரிப்புக்கு பின்...
உன் அப்பாவிடமிருந்து விடைபெறும் தறுவாயில்
சாப்பிடு ப்பா என உன் தாய் கூற...
உன் தந்தை அதை வழிமொழிய....
மறுப்பேதும் கூறாமல்
மண்டையை ஆட்டினேன்..
சிரிப்பை அடக்க முடியாமல் நீ சிரித்தாய்...

அரைமணி நேரத்தில் இருமுறை சாப்பிட்டது
இதுதான் முதல்முறை..
உனக்காக ஒரு முறை...
என் வருங்கால மாமனார் மாமிக்காக ஒருமுறை..
ஆம்லேட் வேறு உன் தாய் போட்டுதர..

உன் தந்தை வேகமாக சாப்பிட்டு கொண்டிருக்க...
நான் சாப்பாட்டில் கோலம் போட
( வயிற்றில் இடம் இருந்தாதானே சாப்பிட)
தொண்டைவரை உணவு இருந்ததால்
வாந்தி எடுக்காததுதான் குறை...
டீவியை பார்ப்பது போல்..
என்னை பார்த்து சிரித்துகொண்டிருந்தாய்..
ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தேன்...
உங்களிடமிருந்து விடைபெற்றேன்..

உன் படிப்பை பற்றி..


சிறிது நேரம் தொலைக்காட்சி பாரென..
நீ சமையல் அறைக்கு செல்ல...
நான் ஹாலில் அமர்ந்தபடி இருந்தேன்..
மீண்டும் வந்தாய் என் முன்பு..
ஒரு கையில் தட்டும்..மறுகையில் ஹாட் பாக்ஸ்
சாப்பிட்டு சொல் எப்படி இருக்கென..

உன் பூ விரலால் சுட்ட தோசை..
நானும் பூவைப்போலவே
தோசையைமெதுவாக பீய்த்து சாப்பிட்டேன்..
அமிர்தம் நான் சாப்பிட்டதில்லை..
இப்படிதான் இருக்கும் என உணர்ந்தேன்
உன்னால் படைக்கப்பட்ட உணவு என்பதால்..

எப்படி என் சமையல் என்றாய்..
அமிர்தம் என்றேன்..
யார் அந்த அமிர்தம் என்றாய்..
அடிப்பாவி என நான் சொல்ல ....சிரித்தாய்..!

சில நிமிடங்கள் பேசினோம்..
உன் படிப்பை பற்றி..
ஏதோதோ ஆசைகள் உனக்கு...
மேலும் மேலும் படிக்க வேண்டும்...
வேலைக்கு போகனும் என....
( நீ என் வீட்டிற்க்கு மகாராணியாக வந்தால்
  போதும் என்றது என் மனம்.)
சரிப்பா... நான் புறப்படுகிறேன் என சொல்லியவாறு எழுந்தேன்...

வீட்டிற்கு வந்தவர்களை ..........

வீட்டிற்கு வந்தவர்களை
சாப்பிட்டாயா என கேக்கும் பழக்கமில்லையா...?
சிரித்தவாரே கேட்டேன்
அடப்பாவி என அழைத்தாய்..
நீ செய்த பாவத்திற்கு
என்னை பாவியாக்கினாய்..
தோசை சுட்டு தரவா என்றாய்..
நீ மாவு குடுத்தா கூட குடிப்பேன்.
நீ முறைத்தபடி சிரித்தாய்..
நான் சிரித்தபடி முறைத்தேன்...
போட  "       " என்று
செல்லமாய் என்னை திட்டினாய்..

நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?

மூன்று மாதத்திற்கு பிறகு..

உங்கள் ஊருக்கு வந்தேன்....
எங்க ஊருக்கு வந்தா..
வீட்டிக்கு கட்டாயம் வரனும்னு
உன் அப்பா அழைத்தது ஞாபகத்திற்க்கு வந்தது

உன் இல்லத்திற்க்கு வந்தேன்-ஆனால்
வரவேற்றது நீ மட்டும்தான்
உன் "ட்ரேட்"மார்க் புன்னகையோடு

அம்மா எங்கே என வினவியதும்..
இப்ப அவங்க டூட்டி முடியற டைம்தான்...வருவாங்க..

நெடுநாட்களுக்கு பிறகு
என்னிடம் பேசினாய்
எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு....

உன் கண்ணைப் பார்க்கும்போதெல்லாம்..
தலைகுனிகிறாய்....
நாணமோ..? இல்ல எனக்கு நாமமா?
காதலில்..( மனதிற்குள் நினைத்து கொண்டேன் )

Wednesday 24 August 2011

வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?

ஒகேனக்கல்லில் மேலும் மேலும்..
சிற்சிறு குறும்புகள் செய்து...
என்னை சிரிக்கவைத்தாய்..
அங்கிருந்து புறப்பட எத்தனித்தோம்..
வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்....

என் தெரு பசங்களெல்லாம்
என்னை விநோதமாக பார்த்தார்கள்
திருவிழாவை விட்டுவிட்டு உன்னோடு சுற்றுகிறனே..
திடிரென என்னை அழைத்தாய்..
பனியாரம் வேனும் வாங்கி வா என்றாய்..

எங்க வீடு பக்கத்திலேயே பனியாரம் விற்பார்கள்
இன்று எங்கள் ஊர் திருவிழா என்பதால் கடையில்லை...
சரி கேட்டுவிட்டாலே என்ன செய்வது என
சைக்கிளை எடுத்து கொண்டு ஊர் முழுவதும் சுற்றினேன்
ஊருக்கே திருவிழா என்று தெரிந்தும்..அவளுக்காக..!
எங்கும் கிடைக்கவில்லை...சொன்னேன் அவளிடம்
சோகமாய் முகம் மாறியது அவளுக்கு..
நான் முதமுறையா ஆசையா கேட்டேன்..
வாங்கிதரல நீ என்றபோது மனது அதிகமாக வலித்தது.
அம்மா சிற்றுண்டி சாப்பிட அழைக்க..
சாப்பிட்டபின் ....ஊருக்கு புறப்பட தயாராகி..புறப்பட்டோம்
பேருந்து நிலையம்வரை உங்களுடன் நானும்..

பஸ் ஏறும் போது கிடைத்த தனிமையில் சொன்னேன்.....
இன்னைக்கு நான் சந்தோசபட்ட மாதிரி எப்போதும் இருந்ததில்லை..
இப்படி நான் வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமென...!
அதுக்கேன்ன சிரிக்க வச்சிட்ட போச்சு...
வாழ்நாள் முழுவதும் உங்கூடவே இருப்பேன் என்றாய்..
கண்ணிர்துளி என் கன்னத்தை தொட்டது...

Saturday 13 August 2011

காதலுக்கு இதுவா தகுதி ?

எல்லா இடமும் சுற்றிய பிறகு
புறப்பட எத்தனித்தோம்...
ஒரு திருப்பத்தில் தனிமையில் நாமிருவரும்..
என் அருகே வந்தாய்..
மிக அருகே நின்றாய்..
உன் மூச்சு காற்று காற்றில் கலந்து
என்னை அடைந்தது...
சிறிது நேரம் உன் மூச்சில் நான் வாழ்ந்தேன்..!

நம்ம ரெண்டு பேருல
உயரமானவங்க யாருன்னு பார்க்கலாம் என
சொல்லியவாறு..கைகள் இரண்டும் உரசியவாறு நின்றாய்..
( இப்ப நான் மூச்சே விடலப்பா...)
திடிரென்று சிறு குழந்தை போல்...
நான் தான் உயரம் என துள்ளினாய்...
உன் துள்ளலையும்..சந்தோசத்தையும்
அமைதியாய் ரசித்துவிட்டு
சற்று நேர இடைவெளியில் உன்னிடம் பேசினேன்...

உன்னைவிட நான் தான் உயரம் என நான் கூற..
இருவருக்கும் வாக்குவாதம் ..தொடர்ந்தது..
( அவங்களைவிட நான் ரெண்டு  இன்ச் அதிகம் பா உயரத்தில்)
சரி..நீதான் உயரம் அதிகம்.இப்ப அதுகென்ன என்றேன்..
என்னைவிட அதிக உயரமானவங்ககளைதான்
திருமணம் செய்துகொள்வேன் என்றாய்..

நான் உன்னைவிட உயரம்தான் பா..
உன்னைவிட உயரம்தான் பா..என
இப்போது நான் செல்லமாய் சண்டையிட..
சிரித்தவாறே..இப்ப அதுகென்ன..
என்னமோ நான் உன்ன கல்யாணம் பண்னிகிறேன்னு
சொன்ன மாதிரி குதிக்கிற என்றாய்..

( அடிப்பாவி என்னும் சொல் என் அடி வயிற்றிலிருந்து வந்தது..)

எல்லா ஜென்மத்திலையும் ஆசையை காட்டி..
மோசம் செய்வது பெண்ணின் குணம் என புரிந்தது....!

Saturday 6 August 2011

எதிர்பாராத ஒரு நொடியில்...

படகு சவாரி சென்றோம்....
படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை...
மறுபக்கம் நீயும் நானும்....
(  இரண்டடி இடைவெளியில் )
நடுவில் படகோட்டி....
சிறு அருவி...ஐந்தருவி...என
எல்லா இடமும் சுற்றிகாட்டினான்..படகோட்டி..
அருவியின் அருகே சென்றபோது...
அனைவரும் நனைந்தோம்..
தண்ணீரால் மட்டுமல்ல...
மகிழ்ச்சி வெள்ளத்திலும்தான்..
இடை இடையே...
உன்னையும்....
உன் பெற்றோரையும் நான் போட்டோ எடுக்க...
எதிர்பாராத ஒரு நொடியில்...
ஒரு விநோதமான பாறையை படகோட்டி காட்டினார்..
அதில்  ஒரே நேரத்தில் இருவர் நிற்கும் அளவிற்க்கு இடம் இருக்க..
நீயும் ..நானும் அதற்குள்ளே. செல்ல.
நம் இருவரையும்...சோடியாய்...
உன் தந்தை புகைப்படம் எடுத்தது.....
இன்னும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது...
உன் நினைவை போல........