Popular Posts

Wednesday 24 August 2011

வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமா?

ஒகேனக்கல்லில் மேலும் மேலும்..
சிற்சிறு குறும்புகள் செய்து...
என்னை சிரிக்கவைத்தாய்..
அங்கிருந்து புறப்பட எத்தனித்தோம்..
வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்....

என் தெரு பசங்களெல்லாம்
என்னை விநோதமாக பார்த்தார்கள்
திருவிழாவை விட்டுவிட்டு உன்னோடு சுற்றுகிறனே..
திடிரென என்னை அழைத்தாய்..
பனியாரம் வேனும் வாங்கி வா என்றாய்..

எங்க வீடு பக்கத்திலேயே பனியாரம் விற்பார்கள்
இன்று எங்கள் ஊர் திருவிழா என்பதால் கடையில்லை...
சரி கேட்டுவிட்டாலே என்ன செய்வது என
சைக்கிளை எடுத்து கொண்டு ஊர் முழுவதும் சுற்றினேன்
ஊருக்கே திருவிழா என்று தெரிந்தும்..அவளுக்காக..!
எங்கும் கிடைக்கவில்லை...சொன்னேன் அவளிடம்
சோகமாய் முகம் மாறியது அவளுக்கு..
நான் முதமுறையா ஆசையா கேட்டேன்..
வாங்கிதரல நீ என்றபோது மனது அதிகமாக வலித்தது.
அம்மா சிற்றுண்டி சாப்பிட அழைக்க..
சாப்பிட்டபின் ....ஊருக்கு புறப்பட தயாராகி..புறப்பட்டோம்
பேருந்து நிலையம்வரை உங்களுடன் நானும்..

பஸ் ஏறும் போது கிடைத்த தனிமையில் சொன்னேன்.....
இன்னைக்கு நான் சந்தோசபட்ட மாதிரி எப்போதும் இருந்ததில்லை..
இப்படி நான் வாழ்க்கை முழுவதும் சிரிக்க வேண்டுமென...!
அதுக்கேன்ன சிரிக்க வச்சிட்ட போச்சு...
வாழ்நாள் முழுவதும் உங்கூடவே இருப்பேன் என்றாய்..
கண்ணிர்துளி என் கன்னத்தை தொட்டது...

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

//வாழ்நாள் முழுவதும் உங்கூடவே இருப்பேன் என்றாய்..
கண்ணிர்துளி என் கன்னத்தை தொட்டது...//


ஒவ்வொரு வரியும் மீண்டும் படிக்கத் தோணுகிறது....

Unknown said...

அருமையான நடை!!

Shiva sky said...

சங்கவி ஒவ்வொரு வரியும் மீண்டும் படிக்கத் தோணுகிறது....


மிக்க சந்தோசம் நண்பரே..

Shiva sky said...

மைந்தன்

அருமையான நடை!!

நன்றி தோழா,..