கோவிலை வலம் வந்தோம்....
நான் உன்னையும் சேர்த்து வலம் வந்தேன்...
திடிரென என் நண்பர்கள் என் எதிரே..
என்னை பார்த்து அழைக்க...
தர்மசங்கடமாய் நான் சிரிக்க..
அவர்கள் என்னை முறைக்க...
"அங்கில்" நீங்கள் சுத்தி பாருங்க....
பத்து நிமிடத்தில் வருகிறேன் என விடைபெற்றேன்..
அப்போது நீ சிரித்த சிரிப்பு..
"மாட்டிகிட்டியா" என்பது போல் இருந்தது...
நண்பர்களுடன் சேர்ந்து....
சற்று நேரம் சுற்றிவிட்டு வந்தேன்...
என்னை பார்த்ததும் அதிர்ந்தாய்...
என்ன என்றேன் கண்களால்...
உதட்டின் மீது கை வைத்தாய்(அவங்க உதடு தான் பா)..
"குச்சிமிட்டாய்" சாப்பிட்டேன் என்று சொன்னதற்கு...
உதடு எப்படி சிவப்பானது என்றாய்...
வருடத்திற்கு ஒருமுறை.......அதுதான்
எங்களுக்கு லிப்ஸ்டிக் என சிரித்தவாறே சொல்ல...
நீ முறைத்தவாறே உன் அப்பாவை பின் தொடர்ந்தாய்..!
Popular Posts
-
நான் எதிர்பார்க்காத ஒரு நாள்... அலைப்பேசி அழைத்தது..... அழைத்தது நீ என்பதால்.... ஆர்வமாய் எடுத்தேன். எப்படி "டா" இருக்க? என்...
-
புறப்படலாம் என.. எழுந்தபோது உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள் வீட்டினுல்லே நுழைந்தார்கள்... சிரிப்புடன் உன் தாய் தந்தை.. எப்போது வந்தீர்க...
-
சந்தோசமான பேருந்து பயணம்.. உன்னால்..இன்று எனக்கு..! ஊருக்கு வந்து சேர்ந்தாலும்... உன் நினைவோடவே..பொழுது கழிகிறது... திடிரென்று ஒரு யோசனை.. ...

2 comments:
ஹ்ஹெஹிஹி அருமை பாஸ்!!!கலக்கல் கவிதை!
ஹ ஹா ஹா......நன்றி பாஸ்
Post a Comment