Popular Posts

Tuesday, 31 May 2011

மறுபடியும் வருவாயா?

கனவில் வந்தாள்....
என் கதாநாயகி இன்று..!
கனவிலும் நினைக்கவில்லை....
நீ கனவில் வருவாய் என்று.
தொலைவில் இருந்தவாறு
தொலைபேசியில் நாமிருவரும் பேசினோம்.
பேசினேன்.....
பேசினாய்..
பேசினோம்......
பேசிக்கொண்டே இருந்தோம்
ஐந்து நிமிடத்திற்கு மேல்...
போதும் என நினைத்தாயோ...
உன் அன்னையிடம் கொடுத்துவிட்டாய்
தொலைபேசியை ;

நீ சிரித்தவாறு பேசியது
நீங்கா இடம் பெற்றுவிட்டது
என் மனதில்...

விடிந்தபின் யோசித்தால்..
என்ன பேசினோம் என்றே தெரியவில்லை...
குழம்பியது என் மனம்
என்ன பேசியிருப்போம் என்று !-ஆனாலும்
நினைவிற்கு வரவில்லை...

மறுபடியும் வருவாயா?
என் கனவில்...
காத்திருக்கிறேன்...!

No comments: