Popular Posts

Sunday, 22 April 2012

பசங்க சந்தோசமா இருக்குறது

 
அவள் நினைவுகளிலே..
ஐந்து நாட்கள் ஒடியது....
ஆறாவது நாள்...
அவளே போன் செய்தால்
என்னப்பா மறந்துட்டியா என...
எனக்கு சிரிப்புதான் வந்தது....

ஏ என்ன சிரிக்கிற என்றாய்...
மறக்ககூடிய முகமா? உன் முகம்..
மயக்கும் புன்னகையை தான் மறக்க முடியுமா? என்றேன்...
( முதன் முறையாக வர்ணித்தேன்..)
ஓய் என்ன? ஒட்டர..என்றாய்....

உண்மைலேயே நீ ரொம்ப அழகா இருக்க...
உன் கூட எப்பவும் பேசிட்டே இருக்கனும் போல இருக்கு ....
(கொஞ்சம் தைரியத்தை வரவலைத்துகொண்டு பேசினேன்)..
சில வினாடிகள் உன்னிடமிருந்து பதிலில்லை...
திடிரென்று...சிரித்தாய்....போ பா..
போய் வேலவெட்டி எதாவது இருந்தா பாரு என்றாய்...
நான் நொடிந்து போனேன்...
இம்முறை நான் பேசவில்லை...

ஏ லூஸு ..நான் பிரியா இருக்கும் போது..
நீ எப்ப வேணும்னாலும் பேசு....
அழாத என்றாய்....
அடிப்பாவி....மூஞ்ச பாரு என்றதுக்கு.....
எனக்கும் உன்ன பாக்கனும் போலதான் இருக்கு..
ஊருக்கு வந்துட்டு போ.........

மகிழ்ச்சியில்.. நான் சிரிக்கையில்....
போனை வச்சிட்டு போய்ட்டா...
பசங்க சந்தோசமா இருக்குறது எந்த பொண்ணுக்கும் பிடிக்கிறது இல்லபா.....

1 comment:

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/05/blog-post_18.html?showComment=1400457681427#c72669377640408477

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-