Popular Posts

Sunday, 22 April 2012

பசங்க சந்தோசமா இருக்குறது

 
அவள் நினைவுகளிலே..
ஐந்து நாட்கள் ஒடியது....
ஆறாவது நாள்...
அவளே போன் செய்தால்
என்னப்பா மறந்துட்டியா என...
எனக்கு சிரிப்புதான் வந்தது....

ஏ என்ன சிரிக்கிற என்றாய்...
மறக்ககூடிய முகமா? உன் முகம்..
மயக்கும் புன்னகையை தான் மறக்க முடியுமா? என்றேன்...
( முதன் முறையாக வர்ணித்தேன்..)
ஓய் என்ன? ஒட்டர..என்றாய்....

உண்மைலேயே நீ ரொம்ப அழகா இருக்க...
உன் கூட எப்பவும் பேசிட்டே இருக்கனும் போல இருக்கு ....
(கொஞ்சம் தைரியத்தை வரவலைத்துகொண்டு பேசினேன்)..
சில வினாடிகள் உன்னிடமிருந்து பதிலில்லை...
திடிரென்று...சிரித்தாய்....போ பா..
போய் வேலவெட்டி எதாவது இருந்தா பாரு என்றாய்...
நான் நொடிந்து போனேன்...
இம்முறை நான் பேசவில்லை...

ஏ லூஸு ..நான் பிரியா இருக்கும் போது..
நீ எப்ப வேணும்னாலும் பேசு....
அழாத என்றாய்....
அடிப்பாவி....மூஞ்ச பாரு என்றதுக்கு.....
எனக்கும் உன்ன பாக்கனும் போலதான் இருக்கு..
ஊருக்கு வந்துட்டு போ.........

மகிழ்ச்சியில்.. நான் சிரிக்கையில்....
போனை வச்சிட்டு போய்ட்டா...
பசங்க சந்தோசமா இருக்குறது எந்த பொண்ணுக்கும் பிடிக்கிறது இல்லபா.....

Sunday, 8 April 2012

என் காதலை சொல்லட்டுமா? வேண்டாமா?

சந்தோசமான பேருந்து பயணம்..
உன்னால்..இன்று எனக்கு..!
ஊருக்கு வந்து சேர்ந்தாலும்...
உன் நினைவோடவே..பொழுது கழிகிறது...

திடிரென்று ஒரு யோசனை..
என் காதலை உன்னிடம் சொன்னலென்ன...
இவ்வளவு அதீத அன்பை....
நான் யாரிடமும் செலுத்தியதுமில்லை...
யாரிடமும் பெற்றதுமில்லை...

சொல்லியபின் நீ மறுத்துவிட்டால்....?
நீயும் மத்த பசங்க போலதாண்டா..என கூறிவிட்டால்..
உன்னை என் பிரண்டா தாண்டா நினைச்சேனு சொல்லிட்டா..

சா....ச... என்னென்னமோ கற்பனைகள்...
கடவுளே இதெல்லாம் கற்பனையாகவே இருக்கட்டும்...
அவள் காதல் மட்டும் மெய்யாக இருக்கட்டும்...

என் காதலை சொல்லட்டுமா? வேண்டாமா?

Saturday, 31 March 2012

ஐ லவ் யூ டி .. ஐ மிஸ் யூ டா

விடைபெற்று வந்தேன் உன்னிடமிருந்து.....
நான் ஊருக்கு செல்ல ஆயுத்தமானேன்....
பேருந்து நிலையம் வந்தடைந்தேன்
மிஸ் யூ டா... என்ற உன் குறும்செய்தி வந்தது...
ஆனந்த கண்ணீரின் அர்த்தத்தை உணர்ந்த நாள்..

என் கண்ணீரே சொல்லுமடி...
உன் மேல் எனக்கிருக்கும் அன்பை...என்று
மனதிற்குள் நினைத்து கொண்டேன்

உனக்கு என்ன பதில் அனுப்புவது என....
நினைக்கும்போதே என் நா தழுதழுத்தது...

மறுபடியும் எப்படா என்னை பார்க்க வருவாய் என
உன் அடுத்த குறும்செய்தி...
பொது இடம் எனக்கூட நினைக்காமல்
அழுதேவிட்டேன்...
ஐ லவ் யூ டி என மனதிற்குள் நினைத்துகொண்டு...
ஐ மிஸ் யூ டா என உனக்கு மறுமொழி அனுப்பினேன்.

நண்பர்களே...

நண்பர்களே......
நீண்ட நாட்களுக்கு பிறகு
உங்களை சந்திபதில் மகிழ்ச்சி...

இதோ...
தொடர்கிறது என் காதல் கதை...
(90 % உண்மை 10 % கற்பனை..)