Popular Posts

Tuesday, 26 July 2011

காதலா? கடவுளா..?ஜெயித்தது யார்..?

உன் தந்தை "பாப்கார்ன்" சாப்பிட்டு கொண்டிருக்க.....
நீ அவர் அருகே போனதும் பறித்து சாப்பிட்டாய்...
நான் உன்னை ஓரக்கண்ணால் முறைப்பதை பார்த்ததும்...
இந்தா.சாப்பிடு என்றாய்.....
ஹெ....சிவா வியாளக்கிழமை சாப்பிட மாட்டண்டி....( உன் தாய்)

இல்லமா..அவன் சாப்பிட்டான் முன்ன ...

என்ன சிவா சாப்பிட்டியா என உன் தாய் கேக்க...
அப்போதுதான் உண்மை உரைத்தது......
( சற்றுமுன் சுவிட் கார்ன் சாப்பிட்டது.)
ஒரு கணம் தவித்தேன்..
நீ சிரித்தாய்..
எனக்கு கோபம் வந்தது...
என் மீது..!

2000 நாட்களை கடந்து சென்று கொண்டிருந்த...
என் வியாளக்கிழமையின் விரதத்தை...
என்னுடன் நீ இருந்த
இரண்டாவது நாளிலே முடித்து வைத்தாய்...

சிரிப்பதா..? அழுவதா என தெரியாமலேயே..
சில விநாடிகள் கடந்தது....
இப்போது...ஜெயித்தது

காதலா? கடவுளா..?
தோற்றது நானா? என் விரதமா?...
 

4 comments:

Unknown said...

இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..மன்னிச்சு...

Mathuran said...

முடிவா என்ன சொல்லுறீங்க யாரு தோற்றது பாஸ்... ஹி ஹி
கவிதை அருமை

ஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா?

Shiva sky said...

மைந்தன் சிவா..@
ஹ ஹ ஹா

Shiva sky said...

மதுரன் @

என் ஒவ்வொரு பதிவிற்க்கும் விமர்சனம் எழுதும் நண்பரே..நன்றி