Popular Posts

Monday, 28 March 2011

பூக்களும் ...

என்னவளே.......

பூக்களும்
அழகாகத்தான் காட்சியளிக்கிறது...
உன் தோளில் சாயும்போது...

அந்த ஒரு நொடியில்...

உன்னை கண்ணோடு
கண்பார்க்கும் அந்த ஒரு நொடியில்...
நான் மண்ணோடு மண்ணாகிறேன்...

jan-28


உன்னை சந்தித்தேன்
முதன் முறையாக இன்று...
நன்றாக பேசினாய்.....
எனக்குதான் தயக்கம்
உன்னிடம் பேச...
மகிழ்ச்சி என்றால் என்ன என்று
உணர்ந்த நாள் இது...

Monday, 21 March 2011

பல மொழிகள்

காதல்.
ஊமையையும் பேச வைக்கும் !
காதலித்துபார்
பல மோழிகள் கற்றுக்கொள்வாய்...!
கண்களால் காவிய மொழி..
உதட்டால் இரசாயன மொழி..
கைகளால் இப்புவியின் முதல் மொழி..

Tuesday, 15 March 2011

நீ என் கனவில் .......

உன்னுடன் பேசிய நாட்களைய் விட
நீ என் கனவில் வந்த
நாட்கள் தான் அதிகம் காதலி...
காத்திருக்கிறேன்..... மறுபடியும்
எப்போது பேசுவாய் என!

எப்போது காதல் வரும் ?

என் மீது உனக்கு
எப்போது காதல் வரும் என
எனக்கு தெரியாது......ஆனால்
உன் முகத்தை பார்த்த முதல்நொடியே....
உன் மீது எனக்கு காதல் வந்தது !
என் காதலியே....

Monday, 14 March 2011

முதல் பொய்

வாழ்க்கையில் யாராவது
நான் ஒருவரைதான் காதலித்தேன்..
காதலிக்கிறேன் என்றால்..
அவன்/அவள் கூறும்
முதல் பொய் அதுதான் என்பேன்.......

உன்னை..

மீண்டும் மீண்டும்..
உன் நினைவால் வாடுகிறேன்...
இது நான் வாங்கி வந்த...
வரமா? சாபமா? என தெரியாமல்.

Friday, 11 March 2011

நினைவு நாள்

நீ .....
என் நினைவில் இல்லாத நாள்
என் "நினைவு நாள்"

இதயம் துடிதுடிக்க..

என் தோழியுடன் பேசும்போது
நானே ..எதிர்பாராத ஒரு வினாடியில்
எதிர்முனையில் இருந்து
நீ  பேசுகிறாய்..
அப்போதெல்லாம்..
கைகள் கடகடக்க..
இதயம் துடிதுடிக்க..
காது படபடக்க...
நாவிலிருந்து வார்த்தை தழுதழுக்க பேசுகிறேன்.
சொல்ல நினைக்கும் நினைவுகழும் சரி..
சொல்ல துடிக்கும் வார்த்தைகழும் சரி..
தொண்டையிலேயே நின்று விடுகிறது..!

Tuesday, 8 March 2011

அழுகிறேன் ....

நித்தம்.....
நித்தம்...
உன் நினைவால் வாடுகிறேன்.

சத்தம் இல்லாமல்
அனுதினமும்
அழுகிறேன் ....

நீ என்னுடன்
பேசாத நாட்களில்......
பேசிக்கொண்டிருக்கிறேன் உன்னுடன் "டைரியின்" மூலமாகவும்
கனவிலும் !
கணநேரமாவது....
யோசிப்பயா என்னை ?

Sunday, 6 March 2011

இது முட்டால்தனமா?

எல்லோரும்
காதல் வெற்றிபெற
கையை அறுத்துக்கொள்வார்கள்...
நானோ...?
உனக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்ததால்..
கையை கிழித்துக்கொண்டேன் பிளேடால்..!
இது முட்டால்தனமா?
காதலின் மூலதனமா?
இனியாவது என் அன்பு உனக்கு புரியுமா?

சிரிப்பு வந்தால்...

அசிங்கபட்டாலும் சரி
அவமானபட்டாலும் சரி
கோபம்தான் வரவேண்டும்..ஆனால்
சிரிப்பு வந்தால்...
நீ காதலிக்கிறாய் என்று அர்த்தம் -ஆம்
காதலில் மட்டுமே இது சாத்தியம்

Saturday, 5 March 2011

எரிமலை

நீ என்னுடன் பேசாத நாட்களில்..
என் மனம் இந்த எரிமலையை விட
அதிகமாக கொதிக்கிறது என .
நீ அறியாமல் போனது எப்படி?

இது தான் காதலா?

இருபத்துநான்கு நாட்களுக்கு பிறகு..
உன்னிடம் பேசினென்.
நீ பேசாத இந்த நாட்களில்.....
உலகத்திலெயே..
உன் மேல்தான்
அதிக கோபம் கொண்டிருந்தேன்....
.................................ஆனால்
அத்தனையும்
பொய் கோபம் என்று
உன்னிடம் பேசிய..
இரண்டாவது நிமிடத்திலெயே புரியவைத்தாய்...
இது தான் காதலா?

Friday, 4 March 2011

முத்தம்.

இது காமத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல...
காதலின் வெளிப்பாடு என..
நீ புரிந்து கொள்ளாதது ஏன்?

ரோம் நகர வீதியில்.

ரோம் நகர வீதியில்...
கண்ணை பறிக்கும் மின்னோளியில்..
கைகோர்த்து நாம் நடக்கையில்...
எதிர்பாராத ஒரு வினாடியில்..
உன் கண்ணத்தில் பதிய வேண்டும்
என் உதடு !

சந்திப்போமா?

உன்னை சந்திக்க வரும்..
ஒவ்வொரு முறையும்
சிந்தித்து கொண்டுதான் வருகிறேன்..
என்ன பேசுவது என்று....
ஆனாலும்
தடுமாறுகிறேன்......
நீ அருகே இருக்கும் போது !

கண்ணிர்..

காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு !
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்...
வரவேற்றாய்...

பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ..
எந்த விரல்கள் வீங்கியது..காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய ....
உன் பாதங்களை காட்டினாய் !

வீக்கம் அதிகமாகதான் இருந்தது...
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு....உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....

சொடுக்கு சத்தத்திற்கு பதில்....
உன் அழுகுரல் சத்தம்தான் கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....
என் கண்களும் கலங்க தொடங்கியது..........

TRUE ?

அறியா வயசுக்காதல்
மனதில் அழியாமல் போனதும் உண்டு..!
பருவ வயசுக்காதல்.. சிலரை
பைத்தியம் பிடிக்க வைத்ததும் உண்டு

Wednesday, 2 March 2011

கல்யானத்திற்கு பிறகு..

சனவரி-12 ம் தேதி...
குலுமனாலியில் இருந்தேன்....
அழகு.....
பார்க்க பார்க்க...
பாத்துகொண்டே இருக்கலாம் போல இருந்தது..
அப்போதே முடிவு செய்தேன்
அடுத்தமுறை இங்கு வந்தால்
அது உன்னோடுதான் என்று..

புகைப்படம்..

உன் முகத்தை.....
முதன் முதலாக
புகைப்படத்தில் பார்த்தேன்...
இனம் புரியாத ஒரு உணர்வு...
என் மனதிற்குள் ! அன்றே
முடிவு செய்தேன்...
மணந்தால்....
உன்னைதான் மணப்பதென்று....

மோட்சம்

முழு பௌர்னமி அன்று...
உன்னையும் நிலவையும் ஒப்பிட்டு பார்த்தேன்...
நிலவும் தோற்றது உன் அழகில்...
உன் அழகில் மயங்கிய மேகமும்
மழையாய் மாறி உன்னைத் தொட்டு
மோட்சம் அடைந்தது..!

பூ (அ) கல் ?

கவிஞர்களின் கருத்துபடி...
பெண்கள் "பூ" க்கு ஒப்பானவர்கள்...ஆனால்
நம் விசயத்தில் அப்படியே எதிர்பதம்..
"பூ" போன்ற இலகிய மனமுடைய
என் காதலை ஏற்காத...
"கல்" நெஞ்சகாரி நீ

கவிதை எழுத .....

எனக்கு கவிதை எழுத
கற்றுக்கொடுத்தவள் நீ....
உறங்கி கொண்டிருந்த
என் கற்பனையை
மீண்டும் ஊற்றெடுக்க காரணம் நீ...
இப்போது
என் கற்பனைதிறன் மங்குகிறது...
நீ என்னுடன் பேசாததால்..

Tuesday, 1 March 2011

என்ன செய்வது பெண்ணே?

உன் இல்லத்திற்கு
நான் வரும் போதெல்லாம்
இந்த "பூ"வோடதான் வருகிறேன்
என் காதலை சொல்ல...?-ஆனால்
நட்புடன் நீ
வாசலில் வந்து வரவேற்க்கும் போது..
என் "காதலை" வாசலிலே வைத்துவிட்டு..
நட்புடன் உன்னை பின்தொடர்கிறேன்..!

ஏ மின்னலே.

ஏ மின்னலே.. 
நீ என்னை தாக்கியபோது கூட
பயந்ததில்லை-ஆனால்
அவள் மின்னல் தெரிக்கும்
கண்ணை பார்த்தபின்தான்
பயப்பட்டேன்......
காதல் என்னும் நோய்
என்னை தாக்கிவிடுமோ என்று !

உதடு...

நீ அடுத்தமுறை
உதட்டு சாயம் போடும் போது..
கொஞ்சம் அளவோடு போடு...
நீ எனக்கு ...
முத்தம் கொடுப்பதை
.....கண்டுபிடித்து விடுகிறார்கள் !